பணத்திற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்தது அர்ஜென்டீனா அரசு!

 

அர்ஜென்டீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நாட்டின் குடியுரிமையை எளிய முறையில் வழங்கும் புதிய மற்றும் அதிரடியான திட்டத்தை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க அர்ஜென்டீனா திட்டமிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டினர் $3,500,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.37 கோடி) நிதியுதவி அளிப்பதன் மூலமாக அர்ஜென்டீனா குடியுரிமையைப் பெற முடியும்.

மாற்றாக, அரசு பத்திரங்களில் $800,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.70 கோடி) முதலீடு செய்பவர்களுக்கும் அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் (2026) இவற்றுக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பச் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணத்திற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் இந்தத் திட்டமானது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பணக்கார முதலீட்டாளர்களின் கவனத்தை அர்ஜென்டீனா பக்கம் ஈர்த்துள்ளது.