அரியலூரில் 3 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு! கடத்தி கொலை செய்யப்பட்டாரா? உறவினர்கள் போராட்டம்
Nov 19, 2026, 13:30 IST
அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் மாயமான 3 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் - சரிதா தம்பதியின் மகள் நிவிஷ்னா, நேற்று (நவ.19) மதியம் முதல் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் உள்ள குளத்தில் சிறுமி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியை யாரோ கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு, உடலை குளத்தில் வீசியிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.