undefined

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை முயற்சி!

 

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் செயற்கை மழை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த நாளில் ‘கிளவுட் சீடிங்’ (Cloud Seeding) எனப்படும் செயற்கை மழை ஏற்படுத்தும் முறைமையின் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரேகா குப்தா கூறுகையில், ““காற்று மாசுபாட்டை குறைக்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முயற்சியில், டெல்லியில் செயற்கை மழை ஏற்படுத்தும் பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வானிலை நிலைமைகள் சாதகமாக இருந்தால், குறிப்பாக போதுமான மேக அடர்த்தி மற்றும் ஈரப்பதம் இருக்குமானால், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் வடமேற்கு டெல்லியின் ஐந்து பகுதிகளில் மேக விதைப்பு விமானத்தின் மூலம் முதல்முறையாக செயற்கை மழை சோதனை நடத்தப்படும்.

நிலைமைகள் அனுகூலமாக இருந்தால், அக்டோபர் 29ம் தேதி டெல்லியில் முதல் செயற்கை மழை பெய்யக்கூடும். மாசுபாட்டுக்கு எதிராக டெல்லி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவே ஒரு முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றமாக அமைவுள்ளது,” என்றார்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், தலைநகர் முழுவதும் காற்றுத்திணறலை குறைக்க இது முக்கிய தீர்வாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?