50 வயதில் இல்லற வாழ்க்கையில் இணைந்த அரவிந்த் ஆகாஷ்... நடிகர் வைபவ் வெளியிட்ட திருமணப் புகைப்படம்!
தமிழ் திரையுலகில் சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அரவிந்த் ஆகாஷ். இவர் முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் தவறாமல் இடம் பெற்றுத் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் இவர் அண்மையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான GOAT திரைப்படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துத் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள அரவிந்த் ஆகாஷுக்கு 50 வயதாகும் நிலையில் தற்போது திடீரெனத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நீண்ட நாள்களாகத்single ஆக இருந்த இவர், தனது 50 ஆவது வயதில் ஒரு புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இவர்களின் இந்தத் திருமண விழாவானது மிக எளிமையான முறையில் இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
அரவிந்த் ஆகாஷின் இந்தத் திருமணப் புகைப்படத்தை அவரது நெருங்கிய நண்பரும் சக நடிகருமான வைபவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே வைரலாகப் பரவித் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நடிகர் அரவிந்த் ஆகாஷுக்கு நெட்டிசன்கள் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.