நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷ்லே நோப்கே நியமனம்!
Sep 23, 2026, 21:00 IST
நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆஷ்லே நோப்கே இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாகப் பாகிஸ்தான் அணியின் உதவி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஆஷ்லே நோப்கே, தற்போது ரியான் குக்கிற்குப் பதிலாக நெதர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
வருகிற 2027 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2028 டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் நெதர்லாந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்துவது இவரது முக்கியப் பணியாக இருக்கவுள்ளது.
வீரர்களுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி, அணியின் திறனை மேம்படுத்துவதே தமது முதன்மை அணுகுமுறையாக இருக்கும் என்று நோப்கே தெரிவித்துள்ளார்.