ஆசிய விளையாட்டு 2026: மேசைப்பந்து கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு பதக்கம்! மனுஷ்-தியா அபாரம்

 

 

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. மேசைப்பந்து கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா - தியா சிட்டாலே இணை அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

நகோயாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி ஹாங்காங்கின் டூ ஹோய் கெம் - வோங் சுன் டிங் இணையை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி புள்ளிகளை கைப்பற்றினர்.

allowfullscreen

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் மனுஷ் ஷா - தியா சிட்டாலே இணை 3-1 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் புள்ளிகள் 11-6, 13-15, 11-9, 11-5 என அமைந்தன.இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியதுடன், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது. அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.அரையிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா - தியா சிட்டாலே இணை சீனாவின் சன் யிங்ஷா - வாங் சுகின் ஜோடியை எதிர்கொள்கிறது.

இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் மேசைப்பந்து பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது. மேலும், ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டியில் இந்தியா வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டில் சரத் கமல் - மணிகா பத்ரா இணை வெண்கலம் வென்றிருந்தது.