ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்துவின் பதக்கக் கனவு காலிறுதியுடன் முடிவடைந்தது!
ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் நட்சத்திர வீராங்கனை சென் யூஃபெயிடம் போராடித் தோல்வியடைந்தார்.
உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் சென் யூபெய்யை எதிர்த்துப் பி.வி. சிந்து காலிறுதியில் களமிறங்கினார். போட்டியின் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த செட்களில் சுதாரித்துக்கொண்ட சென் யூபெய் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அடுத்த இரண்டு செட்களை முறையே 21-18 மற்றும் 21-10 என்ற புள்ளி கணக்கில் அவர் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தத் தோல்வியின் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.வி. சிந்துவின் பதக்கக் கனவு காலிறுதியோடு நிறைவு பெற்றது. மேலும், நடப்பாண்டு ஆசிய விளையாட்டுத் தனிநபர் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்கு எந்தப் பதக்கமும் கிடைக்காதது விளையாட்டு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.