பாகிஸ்தான் முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் ஆசிம் முனீர்!

 

பாகிஸ்தான் தனது ஐம்பதாண்டு கால ராணுவ ஒருங்கிணைப்பு முறையை முழுமையாக மாற்றி அமைத்து, மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய கட்டமைப்பின் மூலம், பாகிஸ்தானின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் மீதும் முழுமையான மற்றும் முறையான செயல்பாட்டுக் கட்டளை அதிகாரம் ஆசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆசிம் முனீர், இதன் மூலம் முப்படைகளையும் ஒரே தலைமை அமைப்பின் கீழ் வெற்றிகரமாகக் கொண்டுவந்துள்ளார். இந்த அதிரடி மாற்றமானது பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.