தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்... 7 பெட்டிகள் கவிழ்ந்ததால் பயணிகள் அலறல்... அதிர்ச்சி வீடியோ  !

 

 

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே இன்று (நவம்பர் 11) காலை கொல்கத்தா – சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் இன்ஜின் மற்றும் 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தியின் புறநகர்ப் பகுதியில் உள்ள டிகாரு ரயில் நிலையத்தில் அதிகாலை 6.54 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் நிலையத்திற்குள் வந்துகொண்டிருந்தபோது திடீரென ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சில பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சோனாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், உயிரிழப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.