அஸ்ஸாமில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!

 

 

அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 14) பிற்பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, பிற்பகல் 2.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்த மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.