த்ரிஷாவுக்கு திருமணம் நடக்காதா? அனிருத் திருமணத்தை கணித்த ஜோதிடரின் அடுத்த கணிப்பு!
இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் குறித்த பழைய கணிப்பு மீண்டும் கவனம் பெற்ற நிலையில், நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்தும் ஜோதிடர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு தந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயஸ்ரீ, அனிருத்தின் எதிர்காலத் துணை குறித்து சில கணிப்புகளைத் தெரிவித்திருந்தார். தற்போது அனிருத் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்தப் பழைய வீடியோ மீண்டும் வைரலானது.
இதற்கிடையே, நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஜெயஸ்ரீ, த்ரிஷாவின் ஜாதக அமைப்பின்படி அனைவரையும் அழைத்து விமரிசையாகத் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்துகள் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சில ரசிகர்கள், “அப்போ மாப்பிள்ளை நாங்க கிடையாதா?” என நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.த்ரிஷாவின் திருமணம் குறித்த ஜோதிடக் கணிப்பு என்பது ஜோதிடரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. நடிகை த்ரிஷா தனது திருமண முடிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகத் தகவல் இல்லை