தமிழக அரசியலில் விஜய்க்கும் தனுசுக்கும் இடையேதான் போட்டி - பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணிப்பு!
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்பட்ட பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், தமிழகத்தின் வருங்கால அரசியல் சூழல் மற்றும் முக்கியத் தலைவர்களின் ஜாதகப் பலன்கள் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
விஜய் கையில் கட்டியிருக்கும் சிவப்பு கயிறு முருகப்பெருமாளின் அருளைக் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைப்பதுடன், அவர் எடுத்துள்ள அரசியல் பாதை வெற்றிப் பாதையாகவே தொடரும். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவரது அரசியல் பயணம் ஓய்வை நோக்கியே செல்லும்.
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதிக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியே அமையும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தமிழக அரசியலில் முதலமைச்சர் யோகம் இல்லை.
எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் உள்ளது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் வரை விஜய்க்குப் பெரிய போட்டி இருக்காது. தனுஷின் வருகைக்குப் பிறகே தமிழக அரசியலில் விஜய்க்கும் தனுசுக்கும் இடையே புதிய போட்டி உருவாகும்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களுக்கு நற்பணிகளைச் செய்யுமாறு அவர் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் இந்த கணிப்பு தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.