தைவானில் குடியிருப்புப் பகுதியில் பயங்கர வெடிவிபத்து - 13 பேர் காயம்!

 

தைவானின் டைனான் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்த பயங்கர வெடிவிபத்தில் 3 தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

அப்பகுதியில் உள்ள காலியிடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுப்பொருட்களில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. இத்தீ வேகமாகப் பரவி, அங்கிருந்த வெடிபொருட்கள்/வேதிப்பொருட்களில் பட்டதால் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. விபத்தில் சிக்கி 3 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/FO1VYtwYl8A?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/FO1VYtwYl8A/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

வெடிவிபத்தின் தீவிரத்தினால் அருகிலிருந்த 8 வீடுகள் பலத்த சேதமடைந்தன. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினரும் அதிகாரிகளும் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான முதன்மைக் காரணம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.