4 தங்கப் பதக்கங்களை வென்ற ஜார்க்கண்ட் வீரர் தெருக்களில் காய்கறி விற்கும் அவலம்... அதிர்ச்சி வீடியோ!  

 

 

இந்தியாவிற்காக சர்வதேச த்ரோபால் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் அமர்தீப் குமார், ராஞ்சி தெருக்களில் காய்கறி விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். போட்டிகளுக்காக வாங்கிய கடனை அடைக்கவும் குடும்பத்தைக் காப்பாற்றவும் தனது தந்தையுடன் சேர்ந்து அவர் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். நாட்டிற்காகப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுத் துறையிடம் பலமுறை முறையிட்டும் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என அவர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். உரிய ஆதரவு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் தம்மால் தொடர்ந்து நாட்டிற்காகப் பெருமை சேர்க்க முடியும் என அவர் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களின் இத்தகைய துயர நிலை குறித்து அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.