undefined

 விரலால் காரில் பேரெழுதிய சிறுவன் மீது தாக்குதல்... தட்டிக் கேட்ட 2 பேருக்கு கத்திக்குத்து!

 
 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், சாலையோரத்தில் அழுக்கு படிந்த காரின் கண்ணாடியில் பெயரை எழுதியதகாக கூறி 9 வயது சிறுவனை தாக்கியவரைத் தட்டிக் கேட்ட சிறுவனின் உறவினர்கள் 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவான இளைஞரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவாசன் (9) குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் வீட்டிற்கு சிறுவன் சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவனை அழைத்து, ‘எதற்காக காரில் பெயரை எழுதினாய்?’ என்று கேட்டதாக தெரிகிறது. 

‘நான் எழுதவில்லை’ என சிறுவன் சத்தியவர்ஷன் கூறியும், அதை நம்பாத மோகன் சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவைப் பூட்டிவிட்டு சிறுவனை தாக்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவனை காணாத பெற்றோர்,  உறவினர்கள் சிறுவனைத் தேடி சென்ற போது, மோகன் வீட்டிலிருந்து சிறுவனின் சத்தம் கேட்டுள்ளது.  

இது குறித்து தட்டிக்கேட்க சென்ற உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய இருவரையும், மோகன் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாதிப்புக்குள்ளான சிறுவனும், கத்தியால் குத்துப்பட்ட செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகியோர் மூன்று பேரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.