அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ❤️ பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படங்கள்.. வைரலாகும் பதிவு

 

 

தமிழ் சினிமாவில் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அட்டகத்தி தினேஷின் காதல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. பிரபல தொகுப்பாளினி விஜே எழிலரசி, நடிகர் தினேஷை காதலிப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அட்டகத்தி படத்தைத் தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் தினேஷ் நடித்துள்ளார். லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது நடிப்பும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்திலும், தனது 26-வது படமான பந்தா கேங்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

allowfullscreen

இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெறலாம் என்றும் தினேஷ் ஏற்கெனவே சில நேர்காணல்களில் கூறியிருந்தார். ஆனால், அந்த பெண் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு விஜே எழிலரசி அவருடன் இருக்கும் புகைப்படங்களை Instagram-ல் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் ஒவ்வொரு முறையும் தினேஷைத் தேர்ந்தெடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தினேஷுடனான தனது காதலை ரசிகர்களிடம் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான விஜே எழிலரசி, தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதுடன், பல முக்கிய நடிகர்களை நேர்காணலும் செய்துள்ளார். தினேஷ் மற்றும் எழிலரசி தொடர்பான புகைப்படங்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது எழிலரசியின் இந்தப் பதிவு அவர்களது உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறலாம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், திருமண தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.