பயணிகள் அதிர்ச்சி... வாரத்தின் முதல் நாளே கோளாறு... ஆன்லைனில் மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்!
வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான காலை நேரத்தில், வாரத்தின் முதல் நாள் என்பதால் பயணிகள் அவசர அவசரமாக விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பிய நிலையில், இன்று தொழில்நுட்பக் கோளாறால் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 13 இயக்கம் மற்றும் பராமரிப்புத் துறைகளைக் கொண்டுள்ளது.
மெட்ரோ ரயிலின் வணிகத்தில் மெட்ரோ ரயில், மேல்நிலை உபகரணங்கள், சிக்னல், தொலைத்தொடர்பு, கட்டுமானம், வழித்தடங்கள், மின்சாரம் மற்றும் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் மேலாண்மை, பாதுகாப்பு, தானியங்கி டிக்கெட் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆப் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்குவது தடைபடும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகையால் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்க சுரங்கப்பாதை நிர்வாகம் அறிவுறுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!