ஆடி கடைசியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்... சவரனுக்கு திடீரென ரூ.1,280 உயர்வு!

 

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (ஆகஸ்ட் 14) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்து சற்று நிம்மதி அளித்த நிலையில், மாலையில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்த நிலையில், மாலையில் மேலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலையில் விலை குறைந்த சந்தோஷம் நீடிப்பதற்குள் மாலையில் மீண்டும் அதிரடி உயர்வைக் கண்டுள்ளதால், சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.