ஆக. 19-ல் சென்னையில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Aug 16, 2026, 16:45 IST
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17ம் தேதி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 18ம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 19ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.