ஆவடி சுற்றுவட்டச் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு!

 

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வெளிப்புற சுற்றுவட்டச் சாலையில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ரூ.56 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் லாரியில் இருந்த மதுபான பாட்டில்கள் சேதமடைந்ததாகவும், சாலையோரம் சிதறிய பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

allowfullscreen

விபத்து காரணமாக வெளிப்புற சுற்றுவட்டச் சாலையில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போக்குவரத்தைச் சீரமைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்