10,000 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி... நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

 

நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், 'நஷா முக்த் யுவா அபியான்' என்ற 100 வார கால போதைப்பொருள் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 10,000 இடங்களில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களைத் திரட்டி, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் இளைஞர் சக்தியைப் போதைப் பாதையிலிருந்து மீட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதை முதன்மை இலக்காகக் கொண்டு இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.