undefined

பக்தர்களின் கனிவான கவனத்திற்கு... அயோத்தி ராமர் கோயில் தரிசன நேரம் மாற்றம்!  

 

உத்தரப் பிரதேச அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நாடு முழுவதிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். குளிர்காலத்தையொட்டி கோயில் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 6.00 மணிக்குப் பதிலாக 6.20 மணியிலிருந்து தரிசனம் செய்யலாம், இரவு 9.00 மணிக்குப் பதிலாக 8.30 மணி வரை தரிசன அனுமதி வழங்கப்படும்.

மூன்று ஆரத்திகளின் நேரங்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மங்கள ஆரத்தி அதிகாலை 4.30 மணிக்கு, சிருங்கர் ஆரத்தி காலை 6.30 மணிக்கு, சயன ஆரத்தி இரவு 9.30 மணிக்கு நடைபெறும். மதியம் 12 மணி முதல் 1 மணி வரை கோயில் நடை மூடப்படும். அக்டோபர் 23 முதல் இந்த மாற்றப்பட்ட தரிசன நேரம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஆரத்திகளில் கலந்து கொள்ளவும், சுகம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யவும் நவம்பர் 7 வரை வாய்ப்பு உள்ளது. ஒரு நாளில் கோயில் 60 பாஸ்கள் வழங்கும் போதும், சுகம் தரிசனத்திற்கு 325 பக்தர்களுக்கு முன்பதிவு செய்யலாம். பக்தர்கள், கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தரிசன அனுமதி பெற முடியும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!