சரிவில் தவறி விழுந்த குட்டி யானை… பதறிப்போய் மீட்கப் போராடிய தாய் யானை... நெகிழ்ச்சி வீடியோ!

 

 

குட்டி யானை ஒன்று சரிவில் தவறி விழுந்ததும், அதை மீட்க தாய் யானை போராடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியை ஒட்டிய செங்குத்தான பாதையில் குட்டி யானை நடந்து சென்றபோது திடீரென சறுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

allowfullscreen

இதைக் கண்ட தாய் யானை உடனடியாகச் சரிவில் இறங்கி, தனது தும்பிக்கையால் குட்டியைத் தூக்கி மேலே கொண்டுவர முயன்றது. தாய் யானையின் இந்த முயற்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் கவனம் பெற்ற காட்சிகள்

குட்டியை மீட்கத் தாய் யானை மேற்கொள்ளும் முயற்சிகளைக் காட்டும் இந்தக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. தாய் யானையின் பாதுகாப்பு உணர்வையும் குட்டியின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தும் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.