உலகக்கோப்பை பேட்மிண்டன்.. பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர் - தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றனர்!

 

டெல்லியில் நடைபெற்று வந்த 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக முடிவுக்கு வந்துள்ளன. பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர், ஜப்பான் வீரர் கோடாய் நரோகாவை 21-11, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பிரான்ஸ் வீரர் என்ற புதிய சாதனையை அலெக்ஸ் லேனியர் படைத்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான தென்கொரியாவின் அன்சே யங், ஜப்பானின் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை 21-17, 21-14 என்ற நேர் செட்களில் வீழ்த்திச் சாம்பியன் பட்டத்தைக் தட்டிச் சென்றார்.