பகீர் ... 11 மாதங்களாக திட்டமிட்டு மனைவியை மயக்க மருந்து ஊசி மூலம் கொலை செய்த மருத்துவர் !
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் மகேந்திர ரெட்டி (31), தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை (29) மயக்க மருந்து ஊசி மூலம் கொலை செய்ததாக போலீசார் உறுதி செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தடய அறிவியல் அறிக்கையில் அவர் மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டது வெளிச்சம் கண்டது. இதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டு தற்போது 9 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
விசாரணையில், மகேந்திர ரெட்டி தனது மனைவியை 11 மாதங்களாக திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதும், பல முறை முயற்சி தோல்வியடைந்ததும் தெரியவந்துள்ளது. மாதவிடாய் கால வலிக்கு என்ற பெயரில் அவர் மயக்க மருந்தை செலுத்தியதும், "சூனியம் உன்னை பாதித்துவிட்டது, தார்வார் சென்று பூஜை செய்ய வேண்டும்" என்று கட்டாயப்படுத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கிருத்திகா ரெட்டி இதை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மனைவியை கொன்று அவரது தந்தையிடமிருந்த சொத்தை அபகரிக்கவும், துணைப் பயிற்சி பெண் டாக்டருடனான தொடர்பும் கொலையின் பின்னணி காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே மகேந்திர ரெட்டி மயக்க மருந்து புரோபோபோல் (Propofol) ஊசியை கிருத்திகாவிடம் செலுத்தி வந்ததும், அதுவே மரணத்துக்கு காரணமாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து விலகி, உடுப்பியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்ததாகவும், கிருத்திகா மரணத்திற்கு பிறகு சொத்து அபகரிப்பு முயற்சி நடத்தியதும் போலீஸ் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!