பகீர்... தவெக எம்எல்ஏ பெயரைச் சொல்லி பாலியல் வன்கொடுமை... கதறியபடி இளம்பெண் வாக்குமூலம்!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு எதிராக அளித்துள்ள வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வசித்து வரும் பாதிக்கப்பட்ட பெண், இன்று ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு நேர்ந்த கொடூரங்களை அழுது கொண்டே விவரித்துள்ளார்.  "ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ-வின் பெயரைப் பயன்படுத்திய சிலர், என்னை வலுக்கட்டாயமாக ஒரு இடத்திற்குத் தனியாகக் கூட்டிச் சென்றனர். அங்கு அவர்கள் என்னை மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

"இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து யாரிடமாவது வெளியே சொன்னாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, எனது குழந்தையைக் கொன்று விடுவதாக அவர்கள் என்னைக் கடுமையான ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர். அதனால் தான் இவ்வளவு நாட்கள் பயந்து நடுங்கி அமைதியாக இருந்தேன்" எனப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையான தனக்கு, அவரது கட்சியினரே இத்தகைய அநீதியை இழைத்துள்ளது பெரும் மன வேதனையை அளிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் குமுறியுள்ளார். "நான் ஆரம்பம் முதலே முதலமைச்சர் விஜய் அவர்களின் தீவிரமான ரசிகையாக இருந்து வருகிறேன். ஒரு ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்குக் கிடைத்த தண்டனை இதுதானா?

சினிமாப் படங்களில் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அதிரடியாகத் தண்டனை பெற்றுத் தரும் முதலமைச்சர் விஜய், தற்போது நிஜ வாழ்க்கையில் தனது சொந்தக் கட்சியினர் செய்துள்ள இந்த அக்ரமத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? 'தெறி' திரைப்படத்தில் நடிகர் விஜய் வில்லன்களுக்கு வழங்கும் கொடூரமான தண்டனையைப் போல, என் வாழ்வைச் சீரழித்த அந்த இரண்டு மிருகங்களுக்கும் கடுமையான தண்டனையை இந்த அரசு உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும்" என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.