மார்ச் மாதத்தில் 11 நாட்கள் வங்கி விடுமுறை... இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க!
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட விடுமுறை பட்டியலின் அடிப்படையில், மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் 11 நாட்கள் வங்கிகள் செயல்படாது. வார இறுதி விடுமுறைகளும், அரசு அறிவித்த தினங்களும் இதில் அடங்கும்.பண்டிகை நாட்கள் மற்றும் மாதத்தின் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் காரணமாக இந்த விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வங்கிகள் மூடப்பட்டாலும், பணப்பறிப்பு இயந்திரங்கள் மற்றும் இணைய வழி சேவைகள் வழக்கம்போல் இயங்கும். அவசர தேவைகளுக்கு மக்கள் மின்னணு சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 8-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 14-2வது சனிக்கிழமை
மார்ச் 15-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 20 - வெள்ளிக் கிழமை -தெலுங்கு வருடப்பிறப்பு,
மார்ச் 21 - - சனிக்கிழமை -ஈகைத் திருநாள்
மார்ச் 22- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 28 - 4 வது சனிக்கிழமை
மார்ச் 29-ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 31 - திங்கட்கிழமை -மகாவீர் ஜெயந்தி,
இது தவிர 1, 8, 15, 22, 29 ஞாயிற்றுக் கிழமைகள், 14, 21 சனிக்கிழமைகள் என மொத்தம் 11 நாட்கள் விடுமுறையாகும்.