கனமழை... குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை!
தென்காசி மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளிலும் பரவலாக பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குற்றால மெயின் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களிலும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கமாக தமிழகம் முழுவதும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
முக்கியமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக குற்றாலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது.பாதுகாப்பு காரணமாக குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் போலீசார் சுற்றுலா பயணிகளைத் தடுக்க பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!