குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்களால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதிகளில் போலீசார் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தண்ணீர் சீராக இருந்ததால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!