ஐபிஎல் வீரர்களின் ஏலம் டிசம்பரில் கோவாவில் நடத்த பிசிசிஐ திட்டம்!

 

வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை கோவாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) திட்டமிட்டுள்ளதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களுக்கான வீரர்களின் ஏல நிகழ்வுகள் வெளிநாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான ஏலம் மீண்டும் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. 2027 ஐபிஎல் வீரர் ஏல நிகழ்வை வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அதற்கு அடுத்த ஆண்டான 2028 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது குறித்தும் பிசிசிஐ தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவலlகள் வெளியாகியுள்ளன. ஏலம் நடைபெறும் தேதிகள் மற்றும் பிற முக்கிய விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.