2027 ஐபிஎல் மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு!
வரும் 2027-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலத்தை வெளிநாடுகளில் நடத்தாமல், இந்தியாவிலேயே நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏல நிகழ்வுகள் துபாய், ஜெத்தா மற்றும் அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வந்தன. சர்வதேச அளவில் லீக்கின் புகழைப் பரப்பும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் நீண்ட கால வசதியைக் கருத்தில் கொண்டும், வெளிநாடுகளில் ஏலம் நடத்துவதால் ஏற்படும் அதிகப்படியான பயணச் செலவுகள் மற்றும் நிர்வாகச் சிரமங்களைக் தவிர்க்கும் பொருட்டுக் களம் மீண்டும் இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பிசிசிஐயின் இந்த முடிவின் மூலம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அணியின் முக்கிய நிர்வாகிகள் எளிதில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும். மேலும், உள்நாட்டில் ஏலம் நடத்தப்படுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.