கொடூரம்... பெங்களூருவில் பசு மாட்டிடம் அத்துமீறிய இளைஞர்... அதிர்ச்சி வீடியோ!  

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு காட்டன் பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு நபர் தனது சொந்த பசு மாட்டை வழக்கம்போல் சாலையோரம் கட்டிப் போட்டிருந்தார். இத்தகைய சூழலில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்தப் பசு மாட்டிடம் மிக மோசமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். விலங்கினத்திற்கு எதிராக அரங்கேறிய இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயல் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பசு மாட்டின் உரிமையாளர் தற்பொழுது காட்டன் பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளதுடன், ஆதாரத்திற்கான வீடியோ காட்சிகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். கேமரா பதிவில் அந்த வாலிபரின் முகம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளின் பதிவு எண் ஆகியவை மிகத் தெளிவாகத் தெரிவதால், அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இணையதளப் பக்கங்களில் இந்த வீடியோ தற்பொழுது வெளியாகிப் பரவலான கண்டனங்களைப் பெற்று வருகிறது.