பெங்களூருவில் ஓடும் காரில் தீ விபத்து... பெரும் பரபரப்பு!

 

பெங்களூரு கோரமங்களா பகுதியில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோரமங்களா மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சந்திப்பு வழியாக வந்த காரில் டிரைவருடன் சேர்த்து 3 பேர் பயணம் செய்தனர். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து, டிரைவர் சாலையோரத்தில் காரை நிறுத்தினார்.

காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கிய சில நிமிடங்களில் கார் முழுவதிலும் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதுகுறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் காரில் இருந்து இறங்கியதால் 3 பேரும் உயிர் தப்பினர், இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது