உஷார்... ஆயுதங்களுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட்ட நெல்லை இளைஞர் கைது!
திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்தும், ஆயுதங்களைக் காட்டியும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழையபேட்டை பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், தான் 'கெத்தாக' சுற்றித் திரிவதை வெளிக்காட்டும் நோக்கிலும் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்த இசக்கி ராஜா (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் முறையான வேலைக்கோ அல்லது கல்லூரிக்குச் செல்லாமலோ வீட்டிலேயே ஊதாரித்தனமாகச் சுற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைய தலைமுறையினர் மத்தியில் இது போன்ற வன்முறை மற்றும் ஆயுத கலாச்சாரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள போலீசார், இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.