உஷார்... பிரபலமான கடைகளிலும் தங்க விற்பனையில் மோசடி... 18 காரட் தங்கத்தை ஏமாற்றி விற்பனை!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், அதன் தூய்மையைக் குறைத்து நுகர்வோரை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாகச் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.
22 கேரட் (91.6 தூய்மை) தங்கம் என்று கூறிவிட்டு, உண்மையில் 18 கேரட் அல்லது அதற்கும் குறைவான 14 கேரட் தங்க நகைகளை விற்பனை செய்கின்றனர். பி.ஐ.எஸ் (BIS) ஹால்மார்க் முத்திரையைப் போலவே இருக்கும் போலி முத்திரைகளை நகைகளில் பதித்து, அவை தரமானவை எனப் பாமர மக்களை நம்ப வைக்கின்றனர்.
பெரிய நகைக்கடைகளுக்குச் செல்லத் தயங்கும் மக்கள் மற்றும் கிராமப்புற நகை வியாபாரிகளைக் குறிவைத்து இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.
| அம்சம் |
சரிபார்க்க வேண்டியவை |
| BIS லோகோ |
முக்கோண வடிவிலான பி.ஐ.எஸ் சின்னம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். |
| தூய்மை குறியீடு |
22K (916), 18K (750) அல்லது 14K (585) எனத் தங்கத்தின் தூய்மை குறிப்பிடப்பட்டிருக்கும். |
| HUID எண் |
ஒவ்வொரு நகைக்கும் 6 இலக்கங்கள் கொண்ட தனித்துவமான அடையாள எண் (HUID) இருக்க வேண்டும். |
தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை: தங்க நகை வாங்கும் போது ஏமாற்றத்தைத் தவிர்க்க இந்தியத் தர நிர்ணய ஆணையம் (BIS) சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மத்திய அரசு வழங்கியுள்ள 'பி.ஐ.எஸ் கேர்' செயலி மூலம் நகையில் உள்ள HUID எண்ணைத் தட்டச்சு செய்து, அதன் தூய்மை மற்றும் கடையின் விவரங்களை அங்கேயே சரிபார்க்கலாம். நகை வாங்கியதற்கான அசல் ரசீதை (Bill) வாங்குவது அவசியம். அதில் நகையின் எடை, கேரட் மற்றும் செய்கூலி விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.