உஷார்... ஓராண்டுக்கும் மேலாக வங்கி கணக்கை பயன்படுத்தவில்லையா? RBI-யின் அதிரடி உத்தரவு!

 

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும், வங்கிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்றவும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான வரவு அல்லது செலவுப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாத கணக்குகள் 'செயல்படாத கணக்குகள்' என வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய கணக்குகள் சைபர் மோசடியாளர்களின் பிரதான இலக்காக மாறுகின்றன.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள்,  குழு செயல்பாடுகள் நின்ற பிறகு பல கணக்குகள் அப்படியே விடப்படுகின்றன. கல்வி உதவித்தொகைக்காகத் தொடங்கப்பட்டு, படிப்பு முடிந்த பின் கவனிக்கப்படாமல் இருக்கும் கணக்குகள்.

இவற்றை மோசடி நபர்கள் கண்டறிந்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்காகப் (Money Laundering) பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக வங்கி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் கணக்கு இதுபோன்று முடக்கப்பட்டிருந்தால் அல்லது ஓராண்டாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதைப் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முறையான KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் சமீபத்திய புகைப்படங்களை உங்கள் வங்கிக் கிளையில் சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம்.

உங்கள் வங்கி கணக்கில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையை உறுதி செய்து கொள்ளுங்கள். தேவையில்லாத கணக்குகளை முறையாக மூடிவிடுவது பாதுகாப்பானது. உங்கள் செல்போன் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் வங்கிக் கணக்குடன் இணைத்து, வரும் குறுஞ்செய்திகளைக் கண்காணிப்பது அவசியம்.

மக்களின் பணத்திற்கும், தரவுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று RBI தெரிவித்துள்ளது. எனவே, உங்கள் பழைய வங்கி கணக்குகளை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது தற்போதைய சூழலில் மிக அவசியம்.