உஷார்... தமிழகத்தில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளை ஜூலை 30ம் தேதி முதல் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் ஜூலை 31ம் தேதி கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி  மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.