உஷார்... தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 22 வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் (Humidity) காரணமாக, பொதுமக்களுக்குச் அசௌகரியம் ஏற்படும் சூழல் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.