உஷார்.. இன்று தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 8 மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்தடை அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் மாதாந்திர மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் மற்றும் அவசரகாலக் கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகள் காரணமாக, இன்று ஜூலை 15ம தேதி புதன்கிழமை சென்னை, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய  8 முக்கிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மின்தடை கிடையாது. பராமரிப்புப் பணிகள் நடைபெறும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட ஒரு சில குறிப்பிட்ட முக்கியப் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இந்தத் திட்டமிடப்பட்ட மின்தடையானது இன்று காலை 09:00 மணிக்குத் தொடங்கி மாலை 04:00 அல்லது 05:00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே நிறைவடைந்தால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு உடனுக்குடன் மின் விநியோகம் சீரமைக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 8 மணி நேரம் மின்தடை அமலில் இருக்க வாய்ப்புள்ளதால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளை (தண்ணீர் சேமிப்பு, மின் சாதனங்களைச் சார்ஜ் செய்தல் போன்றவை) முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

தங்களது பகுதிக்குரிய துல்லியமான மின் நிறுத்த விபரங்களை அறியப் பொதுமக்கள் மின்வாரியத்தின் 'மின்னகம்' (94987 94987) நுகர்வோர் சேவை மைய எண்களைத் தொடர்பு கொண்டும் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.