உஷார்... வங்கியில் உதவுவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ரூ.1.25 லட்சம் திருட்டு!

 

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் சபிதோன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில், பணம் செலுத்தச் சென்ற இளம்பெண்ணிடம் நூதன முறையில் உதவுவது போல் நடித்து ரூ.1.25 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபிதோன் நகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு இளம்பெண் ஒருவர் பணம் செலுத்துவதற்காகச் சென்றுள்ளார். அப்போது படிவத்தை (Challan) நிரப்புவதற்கு உதவுவது போல் அருகில் வந்த மர்ம நபர், சூழ்ச்சியாகக் கணக்கு எண்ணில் ஒரு இலக்கத்தைத் மாற்றி எழுதியுள்ளார்.

பின்னர், கணக்கு எண் தவறுதலாக உள்ளதாகக் கூறி, வேறு படிவத்தை எடுத்து வருமாறு அந்தப் பெண்ணை அவர் திசைதிருப்பியுள்ளார். பெண் படிவம் எடுக்கச் சென்ற அந்தத் இடைப்பட்ட நேரத்தில், கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.