உஷார்... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கரம்... பெண் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது!

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குளியலறையில், பெண் ஒருவரை ரகசியமாக மொபைல் போனில் ஆபாச வீடியோ எடுத்த வாலிபரை அங்கிருந்த பயணிகள் மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள பொதுக் குளியலறையைப்  பயன்படுத்திய போது, வாலிபர் ஒருவர் தனது மொபைல் போன் மூலமாக அந்தப் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனைத் தற்செயலாகக் கவனித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மற்றும் சக ரயில் பயணிகள் ஓடிவந்து, தப்பியோட முயன்ற அந்த வாலிபரைச் சுற்றி வளைத்து அதிரடியாகப் பிடித்தனர். பயணிகளால் பிடிக்கப்பட்ட அந்த வாலிபரை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரிடமும், ரயில்வே போலீசாரிடமும் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் அருண் ராஜ் (27) என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அருண் ராஜைக் கைது செய்த போலீசார் அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், அருண் ராஜ் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் (வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட) காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் நிலையத்தின் முக்கியப் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது பயணிகள் மத்தியில் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.