உஷார்... அமலுக்கு வந்தது ‘ஜன் விஸ்வாஸ் சட்டம்’... பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அபராதம்... ரயில்வே அபராத கட்டணங்கள் உயர்வு!

 

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதைத் தடுக்கவும், முறைகேடான முறையில் டிக்கெட்டுகளைப் பதுக்கும் இடைத்தரகர்களை ஒடுக்கவும், இந்திய ரயில்வே வாரியம் கொண்டு வந்துள்ள புதிய அபராதக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் நாடு முழுவதும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.

மத்திய அரசின் 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் இந்திய ரயில்வே சட்டம் 1989-இல் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வேயின் வருவாய் பாதுகாப்பையும் உறுதி செய்ய வழிவகுக்கும்.

ரயில்களில் முறையான டிக்கெட் அல்லது பயண அட்டை இன்றி பயணிப்போருக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதி (பிரிவு 137 & 138) படி, இதுவரை உரிய டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு வசூலிக்கப்பட்ட குறைந்தபட்ச அபராதத் தொகை ₹250-லிருந்து ₹500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டிக்கெட் இல்லாத பயணிகள் இந்த ₹500 அபராதத் தொகையுடன், அவர்கள் பயணித்த தூரத்திற்கான அசல் ரயில் கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.

டிடிஇ போன்ற அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களால் இந்த ₹500 அபராதம் உடனடியாக விதிக்கப்படும். ஆனால், இந்த அபராதத்தைச் செலுத்த மறுப்பவர்கள் மீது நீதிமன்றம் மூலம் அதிகபட்சமாக ₹1,000 வரை அபராதமோ அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ விதிக்க பழைய சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது (இதில் மாற்றமில்லை).

பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அபராதம்

பெண் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ரயில்களில் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி நுழையும் ஆண்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

பிரிவு 162-இன் கீழ் நடவடிக்கை: பெண்களுக்கான பாதுகாப்புப் பெட்டிகளில் அனுமதியின்றி அல்லது விதிகளை மீறிப் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கு இனி ₹2,500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அத்தகைய பயணிகளை உடனடியாகப் பெட்டியை விட்டு வெளியேற்றவும், தேவைப்பட்டால் ரயில்வே பாதுகாப்புப் படை மூலம் கைது செய்யவும் ரயில்வே ஊழியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார் இணைப்பு கட்டாயம்

ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் மென்பொருட்களைப் பயன்படுத்தி நொடிப் பொழுதில் டிக்கெட்டுகளைப் பதுக்கும் போலி ஏஜென்ட்டுகளை ஒடுக்க ஐஆர்சிடிசி புதிய டிஜிட்டல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் பயனர்கள், தங்களது கணக்கை கட்டாயம் ஆதாருடன் இணைத்துச் சரிபார்த்திருக்க வேண்டும். தட்கல் புக்கிங்கின் போது ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி சரிபார்ப்பிற்குப் பிறகே கட்டணம் செலுத்தும் பக்கம் திறக்கும்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு (ஏசி வகுப்புகளுக்கு காலை 10:00 முதல் 10:30 வரை; லோயர்/ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு காலை 11:00 முதல் 11:30 வரை) அங்கீகரிக்கப்பட்ட வணிகரீதியான ஏஜென்ட்டுகள் தட்கல் டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் அரை மணி நேரம் பொதுப் பயணிகளுக்கு மட்டுமேயான பிரத்யேக நேரமாகச் செயல்படும்.

யில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் உள்ளே அனுமதியின்றிப் பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் பிச்சை எடுத்தலுக்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படும். ரயிலில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்குத் தொல்லை தருபவர்களுக்கு ₹1,000 அபராதம் அல்லது 24 மணி நேரச் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

யில்களில் தடை செய்யப்பட்ட அல்லது வெடிக்கக்கூடிய ஆபத்தான பொருட்களைக் கொண்டு சென்றால் குறைந்தபட்சம் ₹10,000 அபராதம் பாயும்.

பொதுமக்கள் அனைவரும் ரயில் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, முறையான பயணச்சீட்டுகளைப் பெற்று, பாதுகாப்பான முறையில் தங்களது ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு இந்திய ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.