உஷார்... வீட்டு வாசலில் ஏற்றி வைத்த தீபம்... ‘திபு திபு என’ பற்றி எரிந்த சிலிண்டர்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டு வாசலில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபத்தால் காஸ் சிலிண்டரில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டரை விநியோகம் செய்ய வந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

View this post on Instagram

A post shared by Times Now (@timesnow)

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டின் வாசலைச் சுத்தம் செய்து பூஜை செய்த பெண் ஒருவர், அங்கு எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சமையல் காஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய வந்த ஊழியர், அதைக் கவனிக்காமல் வீட்டின் வாசலில் சிலிண்டரை வைத்துள்ளார்.

அந்தச் சிலிண்டரில் சிறிய அளவில் காஸ் கசிவு இருந்ததாகவும், கசிந்த காஸ் விளக்கின் தீயுடன் தொடர்பு கொண்டதால் திடீரென தீப்பற்றியதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பரவியதும் அதிர்ச்சியடைந்த ஊழியர் உடனடியாக அங்கிருந்து விலகி ஓடினார். பின்னர் தீயை அணைக்க முயன்றதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.