உஷார்... நாளை கடைசி நாள் - LPG சிலிண்டர் e-KYC முடிக்காவிட்டால் மானியம் கட்.. வீட்டிலிருந்தே எப்படி இணைப்பது? முழு செயல்முறை
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டாளர்கள் தங்கள் இணைப்பிற்கான e-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு நாளை ஆகஸ்ட் 23 ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் செயல்முறையை உரிய நேரத்தில் முடிக்கத் தவறினால் எரிவாயு மானியம் நிறுத்தப்படலாம் அல்லது இணைப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம்.
e-KYC சரிபார்ப்பை ஆன்லைனில் முடிக்க ஆதார் அட்டை / ஆதார் எண், எல்பிஜி கணக்கு மற்றும் ஆதாரோடு இணைக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், 16-இலக்க எல்பிஜி நுகர்வோர் எண், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Aadhaar Face RD செயலி ஆகியவைத் தேவைப்படுகின்றன.
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள்:
'Hello BPCL' செயலியைப் பதிவிறக்கி, பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் OTP மூலம் உள்நுழைய வேண்டும். அதில் பாரத் கேஸ் இணைப்பைத் தேர்ந்தெடுத்து 'e-KYC / ஆதார் சரிபார்ப்பு' பகுதிக்குச் சென்று, Aadhaar Face RD செயலி மூலம் முகத்தைச் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இண்டேன் (Indane Gas) வாடிக்கையாளர்கள்:
'IndianOil One' செயலியைப் பதிவிறக்கி உள்நுழைந்து, தேவைப்பட்டால் 16-இலக்க எல்பிஜி ஐடியை இணைக்க வேண்டும். பின் 'e-KYC / ஆதார் அங்கீகாரம்' விருப்பத்தைத் தேர்வுசெய்து, முகத்தைச் ஸ்கேன் செய்து சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.
ஹெச்பி கேஸ் (HP Gas) வாடிக்கையாளர்கள்:
'HP Pay' செயலியைப் பதிவிறக்கி உள்நுழைந்து, ஹெச்பி கேஸ் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 'e-KYC' விருப்பத்தை க்ளிக் செய்து, Aadhaar Face RD செயலி வாயிலாக முக ஸ்கேன் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
e-KYC செய்யாவிட்டால் என்ன ஆகும்?
ஆகஸ்ட் 23-க்குள் e-KYC செய்யத் தவறினால் எரிவாயு இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்படாது. இருப்பினும், e-KYC செயல்முறை முடியும் வரை எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் மற்றும் வங்கிச் கணக்கில் சேரவேண்டிய சிலிண்டர் மானியம் நிறுத்தப்படலாம்.