'பாரதி கண்ணம்மா'  சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் - குவியும் வாழ்த்துகள்!

 

'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரும் மாடலுமான லிங்கேஸ்வரனை இன்று கரம்பிடித்தார். கடந்த ஜூன் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திட்டமிட்டபடி இன்று இருவரது திருமணம் நடைபெற்றது.

உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், சினிமா மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.

சமூக வலைதளங்களில் வினுஷா தேவி மற்றும் லிங்கேஸ்வரன் ஜோடிக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.