அமைச்சர் வன்னி அரசு உருவப்படத்தைச் செருப்பால் அடித்து போராட்டம் - பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனர் கைது!

 

அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னி அரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புதிய தமிழகம் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

allowfullscreen

இந்தப் போராட்டத்தின்போது, பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தர்மா, அமைச்சர் வன்னி அரசின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

பொது இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயன்றதாகக் கூறி, பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தர்மாவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.