BIG BREAKING: அதிர்ச்சி... 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்... ஏஐ முதலீட்டை அதிகரிக்க முடிவு!

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது செலவுகளைக் கட்டுப்படுத்தவும், ஏஐ துறையில் முதலீடுகளை உயர்த்தவும் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேறலாம்.

டேட்டா சென்டர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்பும் ஊழியர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். திட்டத்தை ஏற்பவர்கள் டிசம்பர் 31, 2026 அன்று நிறுவனத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவார்கள்.

விருப்ப ஓய்வு பெற்று வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிலையான பணிநீக்க இழப்பீடு, நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாற்று வேலை வாய்ப்புகளுக்கான தொழில் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2,23,000 முழுநேர ஊழியர்கள் உள்ள நிலையில், 60,000 பேருக்கு விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் ஐடி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.