BIG NEWS: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் நடுவராக சிலாவ்கோ வின்சிச் தேர்வு!

 

உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பு, ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான நடுவர் சிலாவ்கோ வின்சிச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூகி கொலினோ இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியை நடுவராக இருந்து வழிநடத்துவது என்பது தனது வாழ்நாளின் ஆகச்சிறந்த கனவு என்று நெகிழ்ச்சியடைந்த சிலாவ்கோ வின்சிச், இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இறுதிப்போட்டியை எவ்வித தடையுமின்றி சுமுகமாக நடத்துவதற்காக சிலாவ்கோ வின்சிச்சுடன் இணைந்து பணியாற்றப் போகும் பிற நடுவர்களின் விவரங்கள்:

தாமஸ் கிளான்ஸ்னிக் மற்றும் ஆன்ட்ராஸ் கோவாசிச் ஆகியோர் சிலாவ்கோ வின்சிச்சுக்கு உதவியாகக் களத்தில் செயல்பட உள்ளனர்.

இப்போட்டியின் நான்காவது நடுவராக ஆதாம் மகாத்மே நியமிக்கப்பட்டுள்ளார். அவசரக் காலத் தேவைக்கான மாற்று உதவி நடுவராக முகமது அல்கலாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் பல முக்கிய கால்பந்து போட்டிகளை நடத்திய அனுபவம் கொண்ட சிலாவ்கோ வின்சிச், இந்த மெகா இறுதிப்போட்டியை எவ்வாறு கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகக் கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.