புற்றுநோளிகளுக்குப் பெரும் நிவாரணம்.. 543 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைத்தது மத்திய அரசு!
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் மற்றும் ஊசிகளின் விலை மிக அதிகமாக இருப்பதால், நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் சந்தித்து வந்த கடுமையான நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.
மொத்தம் 137 வகைகளைச் சேர்ந்த 543 முக்கியப் புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைக்குறைப்பு நடவடிக்கை வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
பல்போசிலெப் - மார்பகப் புற்றுநோய் மருந்து பழைய விலை ரூ. 40,421. புதிய விலை: ரூ. 2,720. தொடிபா - கீமோதெரபி ஊசி 100mg பழைய விலை: ரூ. 80,072 புதிய விலை: ரூ. 7,150
பிரிடுசொம்பா - புற்றுநோய் ஊசி 420mg பழைய விலை ரூ. 94,951 புதிய விலை: ரூ. 30,593. பிவாசிசுமாப் - புற்றுநோய் ஊசி 400mg பழைய விலை: ரூ. 69,852 புதிய விலை: ரூ. 13,512. அபிராடெரோன் - புரோஸ்டேட் புற்றுநோய் மாத்திரைகள் பழைய விலை: ரூ. 28,000 புதிய விலை: ரூ. 4,840. டசாடினிப் - இரத்தப் புற்றுநோய்/லுகேமியா பழைய விலை ரூ. 17,811 புதிய விலை: ரூ.1,808
மத்திய அரசின் இந்த சிறப்புமிக்க முடிவால், நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் பயன்பெறுவர்.