undefined

‘பிக் பாஸ்’ நடிகை ஜூலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!

 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஜூலி, தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான செய்தியைப் புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபகாலமாக மாடலிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வரும் ஜூலி, தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு, தனது வருங்காலக் கணவர் குறித்த சில தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"நீங்கள் என்னை வலிமையான இடத்தில் வைத்து நேசித்தீர்கள். வேட்புமனு (நிச்சயதார்த்தம்) தாக்கல் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்கத் தயாராக இருக்கிறேன்."

மேலும், "அவரைப் பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டும், ஆனால் இப்போதைக்கு, அவர் தான் எனக்கு ஏற்ற சரியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்றும் குறிப்பிட்டு, உடனடியாக தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலிக்கு நடந்த இந்தத் திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!